மாவட்ட செய்திகள்
பர்கூர் மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தம்மு ரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பர்கூர் போலீசார் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று இருந்த வாலிபர் முருகன் (எ) முருகேசன் வைத்திருந்த பாலிதீன் பையை சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
