BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேலூர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற தோளப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவி காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ரத்து செய்து உத்தரவு:

வேலூர் மாவட்டத்தில் கடந்த வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கல்பனா சுரேஷ் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கல்பனா சுரேஷ் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்றும், ஆதிதிராவிடர் என்று போலி சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான விழிக்கண் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சொந்த ஊர்மக்களிடம் என பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

அதில், அவர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும், போலி சான்றிதழ் அளித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரின் ஆதி திராவிடர் சாதி சான்றிதழை ரத்து செய்வதற்கு விழிக்கண் குழு உத்தரவிட்டது.

மேலும் போலி சாதி சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற கல்பனா சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா சுரேஷ் காசோலைக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )