BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்-வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் களுக்கான பயிற்சி.

திண்டுக்கல்-வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் களுக்கான பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

 

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் யுனிசெப் ஆகியவை சார்பில் வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் திட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(21.04.2022) நடைபெற்றது.இந்த பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது.
குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் நடவடிக்கைகள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குழு உருவாக்கும் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,இந்த விஷயத்தை சாதாரணமாக கருதாமல் முக்கியமாக கருதி பணிகள் மேற்கொள்ள வேண்டும்,
குழந்தைகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த, கிராம மற்றும் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் பற்றிய செயல்முறை தெளிவை உருவாக்குதல், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டங்களை திறம்பட நடத்துதல் மற்றும் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே புரிதலை கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது கணிவுடன் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தவும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்வமுடன் பணியாற்ற வேண்டும்.மேலும் பொதுமக்களுக்கு உதவிட அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும், உதவி செய்வதற்காகவே பதவி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும், நாம் செய்கின்ற செயல் கிராமத்திற்கு நல்லது என்று கருதினால் அதை விரைந்து செயல்படுத்த வேண்டும்,
18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு உடல், மனம், மருத்துவம் ரீதியாக இடையூறுகள் ஏற்படாத வண்ணமும், குழந்தை திருமணங்கள் நடைபெறாத வண்ணமும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாகவும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டமாகவும் மாற்ற திறம்பட செயல்பட வேண்டும் எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.உடன் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், மாநில கருவூல மைய இயக்குநர் (பொ) அன்புபிரியவதினி, தொழிலாளர் நலத்துறை ஆலோசகர் பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )