மாவட்ட செய்திகள்
வேலூர் மாநகராட்சி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா பதவியேற்பு!
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் பதவி ஏற்பு விழாவில் வேலூர் எம்.பி., கதிர் ஆனந்த் கலந்து கொண்டு வாழ்த்து! தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அணியில் இடங்களை பிடித்து வெற்றி வாகை சூடியது. இதையடுத்து வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ளடக்கிய 60 வார்டுகளில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வேலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத் தலைவராக புஷ்பலதா வன்னிய ராஜா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் புஷ்பலதா வன்னியராஜா தனது பதவியை ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மேயர் சுஜாதா ஆனந்தன் மற்றும் துணை மேயர் சுனில் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.