மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைந்துள்ள ஆவுடையார்
பார்வதி ,வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் புதிதாக ஸ்ரீ சிவன் பார்வதி வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி, ஆஞ்சநேயர்,
கால பைரவர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மங்கள இசை, விநாயகர் அனுக்ஞை, ஸ்ரீ மஹா கணபதி, மஹா லக்ஷ்மி, நவகிரகங்கள் பூஜை, தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றது மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்கணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது இதையடுத்து.
இன்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் இரண்டாம் யாகசாலை பூஜையும் மஹா சங்கல்பம்
நடைபெற்றதை யடுத்து சர்வசாதகம் சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில்
சுவாமி கலச புறப்பாடு ஏற்பட்டு கோயில் கோபுர கலசத்திற்கு மஹா பூர்ணாஹூதி மற்றும் மூலஸ்தானத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சிறப்பித்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினைதிருப்பணி குழு தலைவர் ரவிக்குமார், பொறுப்பாளர் விஜய பூபதி, நவீன் குமார் மற்றும் திருக்கோவில் திருப்பணி குழுவினர் ஊர் பொதுமக்கள் ஐயப்ப சேவா சங்கம் மற்றும் அனைத்து இளைஞர்கள் நற்பணிமன்றம் ஏற்பாடு செய்தனர்.