மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் பக்கரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் சம்பவம் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் மின்வாரிய அலுவலரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் தொடர் மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும் என சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.