மாவட்ட செய்திகள்
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்வி எதிரொலி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியில் 1971 ஆம் ஆண்டு விவசாய பயன்பாட்டிற்காக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மத்திய மாநில பண்ணை துவங்கப்பட்டு சுற்றுவட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதை ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் பண்ணை துவங்கப்பட்டது. பின்னர் இந்த அரசுப் பண்ணை நட்டத்தில் இயங்கவதாக 2000ம் ஆண்டு மூடப்பட்டது.
இதனால் இதையே நம்பியிருந்த விவசாயிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில்
பலகட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மானிய கோரிக்கை மத்திய கோரிக்கை வைக்கப்படும் கிடப்பில் போடப்பட்ட நிலையில்
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சட்டமன்றத்தில் தங்கள் பகுதியில் பயணற்று கிடக்கும் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பரப்பிலான நிலத்திணை அரசு பயன்படுத்திட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்வியின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இன்று மேல்செங்கம் பண்ணையை அரசு எந்த வகையில் உபயோகப்படுத்தலாம் எனவும் இது குறித்த விரிவான அறிக்கையை அரசுக்கு தெறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.