மாவட்ட செய்திகள்
பத்தாம் வகுப்பில் தனது படிப்பை தொடர முடியாத நிலை :மாணவர் பரிதவிப்பு!
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எம். தருண் குமார். சிப்காட் பகுதியில் வித்யாலயா சிபிஎஸ்சி எனும் பள்ளியில் 2017 -18 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார் .ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படித்து வந்த நிலையில் சரியாக வகுப்பு நடக்காத காரணத்தால் இந்த பள்ளியில் இருந்து விலகி ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பகுதியில் இயங்கிவரும் லீடர்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் ஜூலை 2021 – 22 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் , கடந்த டிசம்பர் மாதம் இந்த பள்ளியை அணுகி சிபிஎஸ்சி போர்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்டதற்கு உங்கள் மகனின் எமிஸ் நம்பர் ஏழாம் வகுப்பை காட்டுவதால் எங்களால் ரசிஸ்ட் முடியவில்லை என்று காரணம் கூறி முன்னர் படித்த பள்ளியில் சரி செய்து வாருங்கள். அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு என்ஓசி வாங்க முடியும் என்று கூறினர் .பின்பு தான் தெரிய வந்தது லீடர்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி அன் ஆப்பிலியட் பள்ளி என்று. இந்த இரு பள்ளிகளும் ஒருவர் மீது ஒருவர் காரணங்களைக் கூறிக் கொண்டு இருப்பதால் இன்று என் மகன் 2022 -23 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு சேர முடியாத நிலையில் உள்ளார். மறுபடியும் ஒன்பதாம் வகுப்பில் தான் சேர வேண்டும் என்று கூறியதால் என் மகன் மற்றும் நாங்கள் மிகவும் மனமுடைந்து உள்ளோம். கொரானா காலத்தில் வேலை இல்லாத நிலையிலும் இரு பள்ளிகளில் எவ்விதத் கட்டண பாக்கியம் வைக்கவில்லை
இரு பள்ளிகளிலும் விசாரித்து எனது மகன் பத்தாம் வகுப்பு படிப்பை தொடர வழிவகை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று புகார் மனுவுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமரவேல் பாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து மாணவன் தருண் குமாரின் தந்தை மோகன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
மாணவன் தருண் படித்த இரு பள்ளிகளும் தங்களது மெத்தனத்தால் மாணவனின் படிப்பில் ஒரு வருடம் மீனாய் போவதற்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் மாணவனும் அவரது பெற்றோரும் கவலையுடன் உள்ளனர். மாணவனிடம் கல்விக் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒரு வருடம் வீணாய்ப் போகும் அளவுக்கு மெத்தனமாக இருந்த பள்ளிகள் மேல் மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.