மாவட்ட செய்திகள்
வேலூர் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது. இதற்கு வெளிமாநிலங்களில் இருந்து மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சனையாக பல வருடங்களாக இருந்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் இன்று காலை ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி நடந்தது மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
கடைகளின் முன்பு அவர்கள் அமைத்துள்ள கூரைகள் ,விளம்பர போர்டுகள் ,சிமெண்ட் சிலாப்புகள், படிகட்டுகள் உள்பட அனைத்தையும் ஏற்றினார்.
அகற்றப்பட்ட பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றபட்டபோது வியாபாரிகள் பலர் தங்கள் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டனர் .எனினும் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து அகற்றினர். ஆற்காடு ரோட்டில் கலெக்டர் அலுவலகம் வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் கருணாகரன் போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலான ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்தநிலையில் ஆக்கிரமிப்பை ஒட்டி ஆற்காடு சாலை பரபரப்பாக காணப்பட்டது .இனிவரும் நாட்களில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.