மாவட்ட செய்திகள்
சீர்மிகு நகர திட்டப் பணிகள், அவை செயல்படுத்திய விதம் மற்றும் இப்பணிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு.
சீர்மிகு நகர திட்டப் பணிகள், அவை செயல்படுத்திய விதம் மற்றும் இப்பணிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் திரு. டேவிதார், அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு தமிழக அரசினால் அமைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த இரு தினங்களாக (20.04.2022 & 21.04.2022) தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைமேம்பாட்டு பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், சூரிய ஒளி மின்சக்தி திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் உள்ளிட்ட 103 எண்ணிக்கையிலான அனைத்து திட்டப்பணிகளையும் நேரடியாக கள ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையினை தமிழக அரசுக்கு வழங்க உள்ளார்கள்.
மேலும் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன் ரமேஷ் மற்றும் பல அலுவலர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஆய்வு கூட்டத்தில் சுமார் 974.58 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளில் தற்போது சுமார் 146.17 கோடி மதிப்பிலான 35 எண்ணிக்கையிலான திட்ட பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர பெற்றுள்ளது என்றும், 828.41 கோடி மதிப்பிலான 68 எண்ணிக்கையிலான பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தும் சரியான திட்டமிடலுடன், உறுதியாகவும், தரமாகவும் அமைத்து தர வேண்டும் என்றும் பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் திட்டப்பணிகள் அமைத்து தர வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.