BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குழந்தை பாக்யம் இல்லாததால் மன உளைச்சலில் பெண் தீயிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம்,
மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கிராமத்தைச் சேர்ந்த வர் காத்தமுத்து விவசாயி இவருக்கு கடந்த 11 ஆண்டுளுக்கு முன் சமயபுரம் அருகே மாடக்குடி கிராமத்தைச்
31 வயதான பேபிஷாலினுக்கு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார்
இன்று தனது கணவர் வெளியில் சென்ற நேரத்தை பார்த்து வீட்டின் மாடியில் மண்ணெண்னை எடுத்து ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
குழந்தை பாக்யம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்துகொண்டது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )