மாவட்ட செய்திகள்
இருபத்தைந்தாயிரம் பணம் தராததால், பொம்மை வியாபாரியை கத்தியால் குத்திக் கொலை செய்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்.
இருபத்தைந்தாயிரம் பணம் தராததால், பொம்மை வியாபாரியை கத்தியால் குத்திக் கொலை செய்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் அவரது மகன்கள் தலைமறைவு. உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.
தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (53). இவர் பெரியகோயில் பகுதியில் பொம்மை கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் குமரவேலு (56) என்பவரிடம் 25,000 வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் பெற்று நீண்ட நாட்கள் ஆகியும் அசலும், வட்டியும் சரவணன் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இந்த கடன் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என சரவணை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் குமரவேலு. அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணை குமரவேலு மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சரவணை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குமரவேல், அவரது மகன்கள் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.