BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய முன்னாள் காதலன்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய முன்னாள் காதலன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் அருகே பாடி கலைவாணர் நகரை சேர்ந்தவர் சர்மிளா/21. இவர் திருமுல்லைவாயலில் உள்ள ஒரு ஸ்வீட்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார் . சர்மிளா பதினோராம் வகுப்பு படிக்கும்போது திருவேற்காடு பகுதியை சேர்ந்த சங்கர்/24 என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இவர்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.அதனால் சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னரசிகா/23 என்ற பெண்ணை திருமணம் செய்தார்.அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த மாதம் சர்மிளாவுக்கு தெரியவந்ததில் கடும் அதிர்ச்சி அடைந்தார்.சங்கருடன் பேசுவதை சர்மிளா நிறுத்தினார்.இந்நிலையில் நேற்று மாலை ஸ்வீட்ஸ் கடையில் சர்மிளா இருந்தார்.அங்கு சங்கர் தனது மனைவி பிள்ளையுடன் வந்தார். கடையில் இருந்த சர்மிளாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் பேசுமாறு சர்மிளாவிடம் வற்புறுத்தி உள்ளார்.


பேச மறுத்தால் காதலித்த போது எடுத்த வீடியோக்களை காட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் திடீரென சங்கருக்கும் சர்மிளாவுக்கும் தகராறு ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சர்மிளா தனது தம்பி இளங்கோவனுக்கு/19 போன் செய்தார். உடனே அவர் நண்பர் சுரேந்திரன்/19 என்பவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.கடையில் குளிர்பானம் அருந்தி கொண்டிருந்த சங்கரை இருவரும் சரமாரியாக தாக்கினர்.இதில் சங்கர் நிலை குலைந்து போனார்.உடனே சங்கர் திருவேற்காட்டை சேர்ந்த நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அடுத்த சில நிமிடங்களில் 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்தது.அங்கிருந்த இளங்கோவன் சுரேந்திரன் ஆகியோரை சரமாரியாக வெட்டியது. ஏற்பட்டது.

அப்பகுதியே போர்க்களம் போல் ஆனது.சிறிது நேரத்தில் அந்த கும்பல் தப்பிச் சென்றது.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயம் அடைந்த இளங்கோவன் சுரேந்திரன் ஆகியோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவு மூலம் 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.இதில் தலைமறைவாக இருந்த திருவேற்காடு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர்/23.அயப்பாக்கம் திருவள்ளூர் குடியிருப்பை சேர்ந்த எரேமியா/24.அம்பத்தூர் சத்யா நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வன்/23 ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )