மாவட்ட செய்திகள்
தஞ்சையில் மணல் கடத்திய லாரி பறிமுதல்.
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கார்த்திகேயன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் லாரியை ஓட்டி வந்தவர் அங்கேயே விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீஸார் லாரியை சோதனை செய்ததில் மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.