மாவட்ட செய்திகள்
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் மயக்கம் வாந்தி எடுத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதி.


ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் மயக்கம் வாந்தி எடுத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதி. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மாணவி விடுதியில் உணவு அருந்திய மாணவிகள் 9 பேருக்கு உணவு சாப்பிடுவது ஒத்துக்கொள்ளாமல் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


உடனடியாக அங்கிருந்த மாணவிகள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
