BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு தேசியக்கொடி போர்த்தி  முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் அஞ்சலி!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் தமிழரசன். இவர் டெல்லியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார்.. ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகளே ஆன நிலையில்  20ஆம் தேதி நேற்று டெல்லியில் இருந்து சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடி வன்டறந்தாங்கல் வந்து உள்ளார். இந்த நிலையில் தனது நண்பர் ஒருவருக்கு பொருட்களை அளிக்க நேற்று இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அருகே  சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் ராணுவ வீரர் தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான காட்பாடி வன்டறந்தாங்கலுக்கு கொண்டுவரப்பட்டது… அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அவரது உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நலச் சங்க தலைவர் கே.சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜம்புலிங்கம் ,துணை ஒருங்கிணைப்பாளர் கே.வடிவேலன் ,துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பல சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )