மாவட்ட செய்திகள்
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து திருச்சி ரயில் நிலையம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் #Savesoil டி-சர்ட்களை அணிந்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து மண் அழிவு குறித்தும், அதனால் ஏற்பட போகும் பேராபத்துக்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர் ஆனந்த் கூறுகையில் மண்ணை மண் என்று அழைப்பதற்கு அதில் குறைந்தப்பட்சம் 3சதவீதம் கரிமப் பொருட்கள் (organic content) இருக்க வேண்டும் என ஐ.நா அமைப்புகள் சொல்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மண்ணில் இந்த அளவு 0.5 மட்டுமே உள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நாம் உண்ணும் உணவில் சத்துக்களும் குறைந்து மக்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
மண் வளம் இழந்ததன் காரணமாக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருந்து கிடைத்த சத்து இன்று 8 ஆரஞ்சுப் முதல் 10 பழங்களை சேர்ந்தால் தான் கிடைக்கிறது. என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.