மாவட்ட செய்திகள்
காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு !
வேலூர், தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் உத்தரவின் பேரில், தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தீ தொண்டு வார விழா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்றுவரும் தேசிய மாணவர் படை மாணவர்கள் மத்தியில் மாவட்ட அலுவலர் அப்துல் பாரி ,துணை மாவட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு பணியாளர்கள் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் தீப்பிடித்தால் எப்படி கையாள வேண்டும், கேஸ் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மாடி வீடுகளில் தீப்பிடித்தால் தீயணைப்புத்துறை எப்படி தீயை அனைத்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் . அவசரக் காலங்களில் தீயை எவ்வாறு தடுப்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் செய்முறைகளை செய்து காண்பித்தனர்.
மேலும் இடி-மின்னலின் போது தீ விபத்துக்களை தவிர்ப்பது, மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயிற்சி வகுப்பில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.