மாவட்ட செய்திகள்
பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.
காலதாமதமாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொழுது ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை.
ஆம்புலன்சில் செவிலியர்கள் யாரும் உடன் செல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது.
மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்து மாவட்ட துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு ஆம்புலன்சில் செல்லும் போதே நடுவழியில் பிரசவம் ஆகி ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது.
கடந்த 17ஆம் தேதி இரவு 11 மணிக்கு பள்ளி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளிகொண்டா அடுத்த பிராமண மங்கலம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரின் மனைவியான எஸ்தர் என்பவரை பிரசவத்திற்காக அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில் 18.04.2022 மாலை பிரசவம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பனிக்குடம் உடைந்து நான்கு மணி நேரங்கள் ஆகியும் பிரசவம் ஆகாததால் மாலை சுமார் 6 மணி அளவில் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிப்பெண் எஸ்தர் மற்றும் அவரது கணவரை மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர் சண்முக பிரியா மற்றும் செவிலியர்கள் அனுப்பி வைத்தனர்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை தாண்டி கன்னிகாபுரம் பகுதியில் செல்லும்போது 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது ஆம்புலன்சில் செவிலியர்கள் யாரும் உடன் செல்லாததால் ஆம்புலன்சில் பிரசவம் ஆகவே பெண்ணின் கணவர் செய்வதறியாது தவித்து உள்ளார்.
இந்நிலையில் பிரசவமான கர்ப்பிணி பெண் உடன் சென்ற அவரது கணவர் குழந்தை பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் டெக்னீசியன் ஆகியோருக்கு தகவல் தரவே அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அணைக்கட்டு மருத்துவமனைக்கு தாயையும் குழந்தையும் கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு தாயை மட்டும் அனுமதித்துவிட்டு மருத்துவர்கள் குழந்தையை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளிகொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகப்பிரியா மற்றும் செவிலியர்கள் இளவரசி உள்ளிட்டோரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் பானுமதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.