மாவட்ட செய்திகள்
ஒடுகத்தூர் அடுத்த ஏரியூர் கிராமத்தில் 10 வயது சிறுவன் ஏரியில் மூழ்கி பலியானார்.

ஒடுகத்தூர் அடுத்த ஏரியூர் கிராமத்தில் 10 வயது சிறுவன் ஏரியில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் யுவராஜ் (10). இவர் அதே பகுதியில் உள்ள ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஏரி பகுதிக்கு விளையாட சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக யுவராஜ் ஏரியில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்க போராடியுள்ளனர்.
ஆனால், ஆழமான பகுதி என்பதால் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறை அலுவலர் தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் ராமன், செல்வகுமார், மூர்த்தி, வன்னியரசு, ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டார். இதுகுறித்து சண்முகம் வேப்பங்குப்பம் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஒடுகத்தூர் அருகே நண்பர்களுடன் விளையாட்டுச் சென்ற 10 வயது சிறுவன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
