மாவட்ட செய்திகள்
ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

வேலூர் மாநகர 12 வது வார்டு கவுன்சிலர் டீட்டா சரவணன் தலைமையில்ம்பப எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர துணை மேயர் சுனில்குமார் கலந்துகொண்டு அண்ணா மற்றும் கலைஞர் படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து புதியதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தின் கல்வெட்டினை திறந்து வைத்து திமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். மேலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியில் புதியதாக தி. மு.கழக கிளையை தொடங்கி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தொகுதி சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அஸ்மத் செய்திருந்தார் .இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
