மாவட்ட செய்திகள்
டேங்கர் லாரி மோதி இளைஞர் பலி!

திருவண்ணாமலை, செங்கம் அருகே பால் டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை நேரில் கண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பால் டேங்கர் லாரியின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சில நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் பிரசாந்த் (23) . இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மண்மலை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆவின் பால் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது .
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பால் டேங்கர் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிகழ்வால் திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
