மாவட்ட செய்திகள்
திருப்பூரில் நூல்விலை உயர்வை கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.

நூல் விலை உயர்வை கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார் . நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுசா எழுச்சியுரையாற்றினார் . இதில் நூல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப் பட்டது . மேலும் , திருப்பூரில் கடுமையான தொழில் பாதிப்பு இருப்பதால் கடனை கட்ட முடியாதவர்களிடம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கையும் முன்னி றுத்தப்பட்டது . இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் வேல்முருகன் , தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் , இணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் , கழக அமைப்பாளர் மணிமாறன் , துணை அமைப்பாளர் சீனிவாசன் , துணைத்தலைவர் நாகேந்திரன் , ஆலோச கர் அபுதாகிர் , மேற்கு மண்டல செயலாளர் பிரகாஷ் , இளைஞரணி தலைவர் முகமது பாரூக் , செயலாளர் ராஜ்குமார் உள்பட திருப்பூர் மாவட்ட மற்றும் கழக நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
