BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் செல்போனில் மனைவி நீண்ட நேரம் பேசியதால் ஏற்பட்ட தகராறில் அவரை கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம்.

'சொன்னாலும் கேட்கவில்லை, ஆண் நண்பருடன் நீண்ட பேச்சு': மனைவியைக் கொன்ற கணவன்

இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் செல்போனில் மனைவி நீண்ட நேரம் பேசியதால் ஏற்பட்ட தகராறில் அவரை கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகரில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தவர் புகழ்கொடி. இவர் சரிதா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரவு நேரத்தில் செல்போனில் ஆண் நண்பருடன் நீண்ட நேரமாக சரிதா பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதை அவரது கணவர் புகழ்கொடி கண்டித்துள்ளார். ஆனால், தனது பழக்கத்தை விடாமல் சரிதா தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு தனது ஆண்நண்பருடன் சரிதா செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் புகழ்கொடி கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சரிதாவை புகழ் சரமாரியாக தாக்கினார். இதில் சரிதாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சரிதாவை ஏப்ரல் 18-ம்தேதி புகழ்கொடி சேர்த்துள்ளார். அப்போது, தண்ணீர் குடம் தூக்கி வந்த போது கீழே விழுந்ததில் சரிதாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவரிடம் கூறியுள்ளார்.

ஆனால், சரிதா உடலில் இருந்த காயத்தைப் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து புகழ்கொடியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஆண் நண்பருடன் சரிதா செல்போனில் அடிக்கடி பேசியதால் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவரைத் தாக்கிய போது சரிதாவிற்கு காயம் ஏற்பட்டதாகவும் புகழ்கொடி கூறினார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது தாய் சம்பூர்ணா கொடுத்த புகாரின் பேரில், புகழ்கொடியை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். காதலித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )