BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஐந்து யூனிட் கள் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று 5 அலகுகளில்1078 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை.

தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு அலகில் தலா 210 மெகாவாட் என 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக இந்த அனல்மின் நிலையத்தில் முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது நேற்று முன்தினம் மூன்று அலகுகள் நிறுத்தப்பட்டு இரண்டு அலகுகளில் மட்டுமே 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனை அடுத்து விசாகப்பட்டினத்தில் இருந்து அவசரத் தேவையாக 60 ஆயிரம் டன் நிலக்கரியை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது போதுமான நிலக்கரி கிடைக்கப் பெற்றதை அடுத்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகு களும் முழுவீச்சில் மின் உற்பத்தி செய்து வருகின்றன இதனால் இன்று வழக்கமாக 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பதில் 1078 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )