மாவட்ட செய்திகள்
உலகப் புத்தக தினவிழா சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகப் புத்தக தினவிழா சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை தலைவர் (பொறுப்பு) சிவகுமார் வரவேற்புரையாற்றினார் நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் க.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் ரா.நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் துறை பேராசிரியர் முனைவர் எண்ணம் மங்கலம் பழனிசாமி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் புத்தக பரிசுகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவின் போது கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
