BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் – நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை.

குரங்குகள் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் உள்ள பிஞ்சுகளை பறித்து வீணடித்து வருகிறது. மேலும் ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை அழித்து நாசம் செய்வதுமாக இருந்து வருகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சேனள்ள ஊராட்சிக்குட்பட்ட சின்ன பெரமனூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள், கூட்டமாக வெளியேறி கிராமத்திற்கு நுழைந்துள்ளது. இங்கு வந்துள்ள குரங்குகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை மரத்தில் உள்ள பிஞ்சுகளை பறித்து வீணடித்து வருகிறது. மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு நுழைந்து உணவாக உண்பது பயிர்களை அழித்து நாசம் செய்வதுமாக இருந்து வருகிறது. மேலும் அங்குள்ள கடைகளில் நுழைந்து தின்பண்டங்களை பறித்துச் செல்வது, குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்கிறது.

மேல வீடுகளுக்கு கூட்டமாக நுழைந்து குதூகலமாக விளையாடுவது, பொருட்களை கீழே தள்ளிவிட்டு, அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் துரத்துகின்றவர்களை கடிப்பதற்காக பாய்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். மேலும் பூட்டி உள்ள வீடுகளில் நுழைந்து வீட்டில் உள்ள சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்களை எடுத்துச் செல்வது பாத்திரங்களை கீழே தள்ளி பொருட்களை சேதம் செய்து வருகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, கிராமத்தில் உள்ள குரங்குகளை பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால் வனத் துறையினர் இத்தனை குரங்குகளை பிடிப்பதற்கு வழி இல்லை. ஒரே ஒரு குண்டு மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்களே குரங்கு பிடிப்பவரை அழைத்து வந்து ஒரு சில குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். ஆனால் ஒரு குரங்கை பிடிப்பதற்கு 300 ரூபாய் என்பதால் மொத்த குரங்கையும் கிராம மக்களால் பிடித்து வெளியில் விட பண வசதி இல்லை. இதனால் மீத மிருந்த குரங்குகள் மேலும் இனப்பெருக்கம் உற்பத்தியாகி தற்போது 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கிராமத்திற்குள் சுற்றி வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராமத்திற்குள் நுழைந்து, கிராம மக்களை அச்சுறுத்தி வரும், குரங்குகளை பிடித்து வனப் பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )