மாவட்ட செய்திகள்
வாழ்வாதார மையம் சார்பில் புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாம்!
புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ் புதிதாக திறக்கப்பட்டுள்ள புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய முன்னணி ஹோட்டல் மற்றும் பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி நெல்லித்தோப்பு, பெரியார் நகரில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் S. சிவகுமார் தொடங்கி வைத்து பேசும் போது புதுச்சேரி நகராட்சி பகுதியிலுள்ள வேலையற்ற ஏழை இளைஞர்களுக்கான இது போன்று வேலை வாய்ப்பு முகாம் தொடர்ந்து இந்த நகர வாழ்வாதார மையத்தின் மூலம் நடத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
நகர வாழ்வாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமில் வில்லா சாந்தி பிரஞ்சு ஹோட்டலில் Food & Breverage சர்வீஸ், Chakrikka Solutions நிறுவனத்திற்கான கணினி ஆபரேட்டர், ஜெனி எண்டர் பிரைசஸ் நிறுவனத்திற்கான கணக்காளர், முன் அலுவலக நிர்வாகி மற்றும் பல தனியார் நிறுவனங்களுக்கான 50-க்கும் மேற்பட்ட பணியிடங்களில் பயனாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தப்பட்டது.
இதில் 200-கும் மேற்பட்ட அனுபவமுள்ள மற்றும் அனுபவமில்லாத 10-ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பெற்ற நகர்ப்புற ஏழை இளைஞர்கள் நேரில் வந்து பங்கு பெற்று பயன் பெற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்கள் திறமை மற்றும் முன் அனுபவத்திற்கேற்ப மாதம் ரூ.8500 முதல் ரூ.15000 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி திட்ட அதிகாரி வெங்கடாசலபதி, நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.