மாவட்ட செய்திகள்
நல்லாடையில் அடையாளம் தெரியாத இளைஞர் தூக்கிட்டு மர்மச்சாவு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை பகுதியில் இளைஞர் தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார், பெரம்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நல்லாடை ஊராட்சி கொல்லி மேட்டுத்தெரு அருகிலுள்ள வாய்க்கால் அருகில் உள்ள மரத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ளார்.
நிர்வாக அலுவலர் செல்வகுமார் பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சிவதாஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.