மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் காவலாளியிடம் தகராறு செய்த 2 பேருக்கு ஜெயில் மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பு.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை காவலாளியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த 2 பேருக்கு 5 நாள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.4,500 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார் (33). கடந்த 2017ம் ஆண்டு மே 26ம்தேதி இவர் பணியிலிருந்த போது, அதே ஊர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பரமசிவம் (53), எஸ்எஸ் நகரைச் சேர்ந்த சேகர் (43) ஆகியோர் சதீஷ்குமாரை, அவதூறாக பேசி, தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து சதீஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பரமசிவம், சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன், இந்த சம்பவத்தில் பரமசிவம், சேகர் ஆகியோரை குற்றவாளிகளாக தீர்மானித்து, அவர்கள் 2 பேருக்கும் 5 நாட்கள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.4,500 அபராதமும், இதை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.