BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 50ம் ஆண்டு நிறைவு விழா.

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 50ம் ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு‌.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் 50ம் ஆண்டு நிறைவு விழா சௌபாக்கிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வர் சாந்தி மகேசுவரி, சீனிவாசா மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இலக்குமணப்பெருமாள், பசும்பொன் கல்வி அறக்கட்டளை பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் மன்றம் செயலர் நம்.சீனிவாசன் வரவேற்றார். பேராசிரியர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.


சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் மன்ற நிறுவனர் பேராசிரியர் சங்கரவள்ளிநாயகம் நூல்களை நாட்டுடைமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகாசி ராமச்சந்திரன் பேசினார். தொடர்ந்து முப்பால் பெரிதும் உணர்த்துவது அன்புச் சிந்தனையா, அறச்சிந்தனையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


விழாவில் திருவள்ளுவர் மன்ற சார்பு தலைவரும், லட்சுமி அம்மாள் பல்தொழில்நுட்ப கல்லூரி மேனாள் துறைத்தலைவருமான கருத்தப்பாண்டி, துணைத்தலைவர் திருமலை முத்துச்சாமி, இணைச் செயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாளர் அந்தோணிராசு, உறுப்பினர்கள் பொன்ராசு, கெங்கம்மாள், பரமசிவம், பிரபு, ஆறுமுகம், சங்கரசுப்பிரமணியன், இசைவாணர் சந்திரசேகர்,தமயந்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )