மாவட்ட செய்திகள்
துவாக்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் தலைமையாசிரியரின் விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடிய பெற்றோர்கள்!

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
திருவெறும்பூர் தனி வட்டாட்சியர் கண்ணன் தேர்தல் பார்வையாளராக கலந்து கொண்டார்.
இதில் வாக்கெடுப்பு முறையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவ்வாறு தேர்வான பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் புதிய உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வு பாடலை தலைமையாசிரியர் கருணாம்பாள் எழுதி, அவரை மேடையில் பாடினார். இதற்கு பெற்றோர்கள் நடனமாடினார்.
இதில் வார்டு கவுன்சிலர் நர்மதா, கல்வியாளர் சந்திரசேகர், தன்னார்வலர் ராஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
