BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் கிராம சபை  கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஒன்றிய தலைவர் தேவராஜ்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் ஊட்டச்சத்து குறைபாடுடைய ஆறு குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்தும்  பணியை கரிகிரி ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களைப் பராமரிக்கும் பணியை கரிகிரி ஊராட்சி மேற்கொள்ளும் என்றும், மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தில் மூன்று குழுவாக உள்ள பெண்களை நான்கு குழுக்களாகப் பிரித்து 100 நாள் வேலை நாள்தோறும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

மேலும் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  துணைத்தலைவர் பவுனு மணி, ஒன்றிய கவுன்சிலர் ஏ.இளம் பூபதி, ஊராட்சி மன்ற செயலாளர் கதிர்வேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )