BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு உருவாரங்கள் தயாரிப்பதற்கு உதவ மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிராமங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மக்களால் மீண்டும் வேலை கிடைத்துள்ளது பாரம்பரியத்தை கைவிடாமல் மண்ணிலே கலைவண்ணம் காணும் இந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம் உடுமலை மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பரவலாக பாரம்பரியமாக மண்பாண்டங்கள் மற்றும் கிராம திருவிழாக்கள் உருவாரங்கள் செய்யும் தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளனர்.
புக்குளம் கண்ணமநாயக்கனூர் மரிகந்தை பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் பலர் தொழிலில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
குறிப்பாக மண்பாண்டங்கள் செய்ய குளங்களில் மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து விற்பனையும் பாதியா னதால் பலர் பாரம்பரியத் தொழிலை விட்டு மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
இருந்தாலும் சிலர் பல்வேறு இடையூறுகளை சந்தித்து பாரம்பரியத்தை கைவிடாமல் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கொரானா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிராம கோவில்களில் அனைத்து திருவிழாக்களும் தடைப்பட்டன இதனால் உற்பத்தி செய்து விற்பனை செய்ய கூட வழியில்லாமல் மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்தனர். இவர்கள் குடும்பத்தினரும் பாதித்தனர்.
பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் கொரானா காலத்தில் எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை.
தற்போது கிராம கோவில்களில் இரண்டு ஆண்டுகளாக தடை பற்றி இந்தத் திருவிழாக்கள் இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பாக சித்திரை மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் சித்திரை திருவிழா நோன்பு சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் திருவிழாக்களில் சுட்ட மண்ணாலான சுவாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி முக்கிய இடம் பிடிக்கிறது மேலும் நாய் மாடு போன்ற கால்நடைகளை அவற்றின் உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.


இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டர்கள் குவிந்து மண்பாண்டத் தொழிலாளர் குடும்பத்தினர் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சாலையுரை சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் கூறியதாவது இந்தத் தொழிலில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் இத்தொழிலை கைவிடாமல் செய்து வருகிறோம். தற்போது பார்ப்பனூத்து விளாமரத்துப்பட்டி கிராமத்து மதுரை வீரன் கோவில் திருவிழாவுக்காக சாமி சிலை செய்யும் பணி நடக்கிறது.
இதற்காக குடும்பத்தினர் அனைவரும் விரதம் இருந்து சாமி சிலை தயாரிப்பு ஈடுபடுகிறோம் அனுமதி பெற்று குளத்திலிருந்து மண் எடுத்து அதனுடன் புற்று மண் உள்ளிட்ட மண்ணைக் கலந்து தண்ணீர் விட்டு தயார் செய்கிறோம்.
மண் ஈரப்பதத்துடன் இருக்கும் போது சாமி உருவத்தை வடிக்கிறோம் பின்னர் உருவங்களை தீயிலிட்டு பக்குவப்படுத்தும் இப்பணில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பணியாற்றுகிறோம் வருவாய் குறைவாக இருந்தாலும் இறைவனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறோம்.
சுவாமி ஊர்வலத்தின் போது எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களே சாமியை சுமந்து செல்கிறோம் பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் என் தொழிலை செய்யவிடாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல ஆர்வத்தோடு உள்ளோம் என தெரிவித்தனர்.
மண்பாண்டம் மற்றும் சுவாமி சிலை தயாரிப்பு பிரத்தியோகமாக ஒரு குளங்களில் மட்டுமே மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்கின்றனர் ஒரு லோடு மண் எடுத்தால் அதை பல மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் ஆனால் இதற்கு வருவாய்த்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் தொழிலாளர் நல வாரியங்கள் வாயிலாக அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு இல்லாத காலங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )