மாவட்ட செய்திகள்
சூரியனின் நிழலை வைத்து பூமியின் சுற்றளவை அளக்கும் வானியல் நிகழ்ச்சி.
பூஜ்ஜிய நிழல் தினம் வருடத்துக்கு இரண்டு நாட்கள் வருகிறது. அதாவது சூரியன் செங்குத்தாக 90 டிகிரியில் வரும்பொழுது இந்த பூஜ்ய நிழல் தினம் ஏற்படுகிறது.அந்த பூஜ்ஜிய நிழல் தினமானது கடந்த ஏப்ரல் 17 அன்று உடுமலையில் உற்று நோக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று 24 ஏப்ரல் சென்னை மற்றும் பெங்களூருவில் பூஜ்ஜிய நிழல் தினமாகும். பூஜ்ஜிய நிழல் தினத்தன்று, பூஜ்ஜிய நிழல் ஏற்படும் ஊரிலும், பூஜ்ஜிய நிழல் ஏற்படாத மற்றொரு ஊரிலும் சூரியனின் நிழலினை வைத்து அதாவது உள்ளூர் நண்பகல் நேரத்தில் சூரியனின் நிழல் ஏற்படுவதை உற்றுநோக்கி கணக்கீடுகளின் மூலம் பூமியின் சுற்றளவையும் பூமியின் ஆரத்தையும் கண்டறியும் தேசிய அளவிலான நிகழ்வை நடத்த பெங்களூரு நேரு கோளரங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் , பெங்களூர் ,போபால் மற்றும் தமிழகத்தில் சென்னை பிர்லா கோளரங்கம், மதுரை , உடுமலை காந்தி நகரில் உள்ள கலிலியோ அறிவியல் கழகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சூரியனின் நிழலினை காலை 11 மணி முதல் 1 மணி வரை உற்றுநோக்கும் நிகழ்வில் ஈடுபட்டனர்.
நிழலினை உற்றுநோக்கி கணக்கீடுகள் பெங்களூரு நேரு கோளரங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு பூமியின் சுற்றளவு, சூரியனின் நிழலை வைத்து எவ்வாறு நாம் கணக்கிட முடியும் என்பதை எளிதாக விளக்க முடியும் என்று கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறினார்.
நிகழ்வில் கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள் ஸ்ரீஹரி ,சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற அறிவியல் செயல்பாடுகள் மூலமாக பல்வேறு வானியல் சார் கருத்துக்களை மாணவர்களிடமும் பொது மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே கலிலியோ அறிவியல் கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.