BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கேரள மாணவிகளின் ஆபாச படங்கள்! மிரட்ட துவங்கிய சென்னை கல்லூரி மாணவன்!

 

இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான கேரள மாணவிகளிடம் ஆபாச புகைப்படங்களைப் பெற்று, அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சித்த சென்னை கல்லூரி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோர்களே… உஷாராக இருங்கள். உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த சமூகம் எத்தனை கேடு கெட்டதாக இருக்கிறது என்று சொல்லி தாருங்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை, பிற பெண்களை கண்ணியமாக பார்க்க கற்று தாருங்கள். அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் தொடர்பான செய்திகள் அடுத்த தலைமுறை குறித்து பெரும் கவலையை தருகிறது. நவீனமயமாகிவிட்ட இன்றைய காலத்தில் அதே முறையில் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பரந்து விரிந்த சமூக வலைதளங்கள் மூலமும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இரண்டு கேரள மாணவிகளுக்கு சென்னை இளைஞர் ஆபாச மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தில் ஆக்டிவாக இருந்துள்ளனர். இந்த சிறுமிகளுடன் சென்னையைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் (19) என்ற இளைஞன் பழகியுள்ளார். இவர் இரு சிறுமிகளையும் தனித்தனியே ஏமாற்றி வந்துள்ளார். எனினும் இவரது மயக்கும் ஆசை வார்த்தையை கேட்டு, இவருக்கு இரு சிறுமிகளும் தங்களது ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

 

ஆனால், அதன்பிறகு அந்த ஆபாச புகைப்படங்களை காட்டி அவர் சிறுமிகளை மிரட்டத் தொடங்கினார். மார்க் டி குரூஸ், நான் சொல்வதை கேட்கவேண்டும் இல்லையெனில் ஆபாச புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறி கேரள சிறுமிகளை மிரட்டியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கேரளா மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். கேரளா மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் புகார் மனுவை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதன் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

அதன்பேரில், மார்க் டி குரூஸ் என்ற இளைஞனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )