BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் துவக்கம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை துவக்கி வைத்து கலைஞரின் இந்த வருமுன் காப்போம் திட்டம் மூலம் கருவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

மேலும் சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவம் – சித்த மருத்துவம்- சிறுநீர் கோளாறு பிரச்சனை – இருதய நோய் உள்ளிட்ட உடல் சம்பந்தமான பொது மருத்துவத்திற்கான தனித்தனி மருத்துவர்களைக் கொண்டு முகாம்கள் அமைக்கப்பட்டு இதன் மூலம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் பயன் பெற்றனர்.

மேலும் ரத்ததான முகாம் இதில் நடத்தப்பட்டு யாராலும் ஆனால் இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சியில் மருத்துவர்களைத் தேடி பொதுமக்கள் சென்ற காலம் மாறி தற்போது பொதுமக்களை தேடி மருத்துவம் வந்திருப்பதாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தொலைநோக்கு சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் தற்போது பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர் என கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )