மாவட்ட செய்திகள்
மின்வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 2 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
மின்வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 2 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது!!! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பஞ்சப்படி உயர்வு , பதவி உயர்வு ,வீடு, வாகனம் ,கல்வி கடன்கள் பெறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணையை. கடந்த 12 .04. 2022 அன்று அரசாணை எண் 2ன் மூலம் பிறப்பித்துள்ளது. அரசாணை எண் 2 இதுநாள் வரை பெற்று வந்த உரிமைகளை, ,சலுகைகளை பறிப்பதாகும். பஞ்சப்படிஉயர்வும், பதவி உயர்வும் பணியின் முதுநிலை தொடரச்சியில் கிடைப்பது,வீடுகடன், வாகன கடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியது என்றும் இதை அரசாணை மூலம் நிர்வாகம் பறிப்பது ஐனநாயக விரோத நடவடிக்கை என்றும் உடனடியாக மின்வாரிய நிர்வாகம் பிறப்பித்த அரசாணை எண் 2 ஐ திரும்பப் பெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. மேலும் மின் வாரியத்தில் வேலை பளுகுறைக்கப்பட வேண்டும், காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் ,திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயல்படுகின்ற அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மத்திய சங்க தலைவர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேலு, ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ராஜன், ஐக்கிய சங்கத்தின் திட்டசெயலாளர் ராகவன் ,சிஐடியு மாநில துணைத்தலைவர் ராஜாராமன் , தமிழ்நாடு மின்வாரிய பெடரேஷன் செயலாளர் ராஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேசன், இன்ஜினியர் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் பஞ்சநாதன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் துரை.மதிவாணன், பி.அப்பாத்துரை உள்ளிட்ட வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.