மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தை சீரழிக்கும் வகையில் முழு கொள்ளளவு இயக்காமல் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தை சீரழிக்கும் வகையில் முழு கொள்ளளவு இயக்காமல் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படுவதை கண்டித்தும் மின்வாரிய ஊழியர்களை பாதிக்கக்கூடிய வகையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ள மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய பஞ்சப்படி பென்ஷன் உள்ளிட்டவைகளை தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் வழங்கக்கூடாது என ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு மின் வாரியத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தை சீரழிக்கும் வகையில் தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாமலும் முழு கொள்ளளவை இயக்காமல் காலையில் மட்டும் அனல் மின் நிலையத்தை இயக்கி இரவு நேரங்களில் இயக்காமல் அனல் மின் நிலையத்தை முடக்கும் வகையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்தின் இந்த செயலை கண்டித்து தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் மின்சார வாரியம் மின் வாரிய ஊழியர்கள் பாதிக்கக்கூடிய புதிய உத்தரவை உடனடியாக த திரும்பப்பெற வேண்டும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை முறையாக இயக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.