BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர்.

திண்டுக்கல்லில் பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர் விக்னேஷ் மற்றும் அவருடன் வந்த பெண் மீது திண்டுக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததால் காவல்துறையினருக்கும் இதனை வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தின் போது பெண் காவலர் ஒருவர் பணியில் இருந்தபோது வாகனம் செல்ல அனுமதி இல்லாத பகுதியில் வாகனத்தை செலுத்திய கரூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் பெண் காவலர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி பெண் காவலரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த பத்திரிக்கை துறையினர் புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனுப்பிய காரணமாக தற்போது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வாகனத்தை இயக்கிய கரூரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர் என்று கூறிக்கொண்டு இந்த செயலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )