BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ மையத்தின் சார்பாக இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் தேதி அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து நினைவாக நஞ்சப்ப சத்திரம் கிராமத்தினை ராணுவத்தினரால் தத்தெடுக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி இன்று தென்னக ராணுவ மையம் உடன் நீலகிரி லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தினர்.

ராணுவ மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையின் சிறப்பு கண் மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர்களை கொண்டு இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை மூலம்கண்ணில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால்அவர்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரவிந்த் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இம்முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )