மாவட்ட செய்திகள்
லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால் பேருந்துகள் மற்றும் பொது மக்கள் ஊருக்குள் செல்ல வழியில்லாமல் நடந்து செல்லும் வண்ணம் உள்ளது.

குமரி மாவட்டம் தாழக்குடி பகுதியில் கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக இருந்துகொண்டிருக்கிறது. போக்குவரத்து காவல்துறையின் மூலம் ஒரு காவலரை இறைச்சகுளத்தில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஒரு காவலரை நியமித்து கனரக வாகனங்களை துவரங்காடு சாலை வழியாக செல்வது வழக்கமாக இருந்தது.
இப்பொழுது போக்குவரத்து காவலர்கள் இல்லாத காரணத்தினால் இந்த சிறு வழி சாலை வழியாக சென்னை, திருநெல்வேலி,மதுரை போன்ற இடங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியாக செல்லும் பொழுது சாலைகள் சேதமடைந்து. விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் உள்ளது இன்று பிற்பகல் லாரி ஒன்று பழுதாகி நடுரோட்டில் நின்றதால் பேருந்துகள் மற்றும் பொது மக்கள் ஊருக்குள் செல்ல வழியில்லாமல் நடந்து செல்லும் வண்ணம் உள்ளது. உடனடியாக மாவட்ட காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி செய்தியாளர் சுப்பிரமணி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
