மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இன்று நடந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்.

நிலக்கோட்டை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இன்று நடந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது இதன் மூலம் நோய்தொற்று அதிகமாக பரவும் என பொதுமக்கள் அச்சம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

ஆனால் அதில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பலர் முகக்கவசம் அணிய வில்லை அந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல நோய்த்தொற்று உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

கூட்ட நெரிசலில் பலர் முக கவசம் அணியவில்லை அவர்களுக்கு பாதுகாப்பு முககவசம் சுகாதாரத் துறை மூலமாக கொடுக்கப்படவும் இல்லை நேற்று முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மு க கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடந்துகொண்டது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது வந்த மக்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
