மாவட்ட செய்திகள்
நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதியில் 14 பயனாளிகளுக்கு ரூ.22 இலட்சத்து 50 ஆயிரம் மானிய நிதி உதவி.
காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் முதல் தவணை , மற்றும் இரண்டாம் தவணை, மேலும் மூன்றாம் தவணை பெறுவதற்கான பணி ஆணைகளை 26/04/2022 பாண்டிச்சேரி போக்குவரத்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதியை சேர்ந்த14 திட்ட பயனாளிகளுக்கு ரூ.22 இலட்சத்து 50 ஆயிரம் மானிய நிதி உதவி வழங்குவதற்கான பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் உதவிப்பொறியாளர் சுதர்சன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன் மற்றும் வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்