மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்த மொத்தக் கொள்முதல் வியாபாரியை அதிரடியாக கைது.
கோவில்பட்டியில் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்த மொத்தக் கொள்முதல் வியாபாரியை அதிரடியாக கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நாடார் காலனி பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அதனை விற்பனை செய்து வருவதாகவும் தனிப் பிரிவு காவல் துறை அதிகாரி அருண் விக்னேஷ் ரகசிய தகவல் கிடைத்தது.
அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொள்கையில் ரூபாய் 15,000 மேற்பட்ட மதிப்பிலான பதுக்கி வைத்திருப்பதும் மொத்தமாக கொள்முதல் செய்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சந்திரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.