மாவட்ட செய்திகள்
தஞ்சை பாரத் கல்லூரி 18-வது பட்டமளிப்பு விழா 637 பேருக்கு மேயர். சண். ராமநாதன் பட்டம் வழங்கினார்.

தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியின் 18- வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி செயலாளர் புனிதா கணேசன் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு இளங்கலை மாணவிகள் 527 பேர், முதுகலை மாணவிகள் 110 பேர் என மொத்தம் 637 பேர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். விழாவில் துணை முதல்வர் முத்துகிருஷ்ணன், தமிழ்த்துறை தலைவர் சதானந்தம் மற்றும் இளங்கலை, முதுகலை துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக அளவில் 6-வது இடம் பிடித்த பி.சி.ஏ. மாணவி செங்கொடிக்கு மேயர் சண். ராமநாதன் பட்டம் வழங்கி சிறப்பித்தார். மேலும், மாணவி செங்கொடி என்பவர் கல்லூரியில் படிக்கும் பருவத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான எதிர்ப்பு போராட்டங்களை பல்வேறு வகையில் நடத்தியவர் என்பதும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துப் போராடியது, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது, ஹைட்ரோ கார்பன், அணு உலை போன்ற திட்டங்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
