மாவட்ட செய்திகள்
பொள்ளாச்சியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3.17 லட்சம் திருட்டு: மர்மநபருக்கு போலீசார் வலை!

பொள்ளாச்சியில் உணவகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ3.17 லட்சம் ரொக்கப் பணத்தை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மன்னூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரசாமி. விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் பொள்ளாச்சியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்குச் சென்று நகைக் கடனாக ரூ.3.17 லட்சம் பெற்றுள்ளார். பின்னர், தனது காரில் பொள்ளாச்சி – கோவை சாலையில் உள்ள தனியார் உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளார். இதற்காக வாகன நிறுத்தம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர் வெளியே வந்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரசாமி, இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்மநபர் ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
