BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் பகுதிகளில் கத்திரிக்காய் விலை இல்லாததால் தோட்டத்திலேயே அழகும் அவலநிலை விவசாயிகள் வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கத்தரிக்காய் பயிர் நடவு செய்து அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வந்தனர்.

ஆனால் தற்போது கத்தரிக்காய் விலை ரூபாய் 1 முதல் 2 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதால் அதை வாங்குவதற்கு கூட ஆள் இல்லாததால் தோட்டத்திலேயே அழுகிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர்.

ஒரு ஏக்கர் நடவு செய்ய 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்தும் பலனில்லாமல் வைத்த முதல் கூட கிடைக்காததால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கத்தரிக்காய் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )