மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே டிரைவரின் கட்டுபட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி மைக்கேல் என்பவரின் மகன் மரிய அந்தோணி ஜெயபால்(34) மற்றும் ஆரோக்கியசாமி என்பவரின் மகன் நிக்கோலஸ் (45)மணி ஆகிய இருவரும், தினமும் தருவைகுளத்திலிருந்து ஆம்னி கார் மூலம் மீன் ஏற்றி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மீன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு சாத்தூரிலிருந்து தருவைகுளம் செல்வதற்காக ஆம்னி கார் மூலம் இருவரும் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நிகோலஸ் மணி மற்றும் மரிய அந்தோணி ஜெயபால் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.


சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
