BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் அரசு பள்ளிகளில் ஹை டெக் லேப் மூலமாக நடத்த பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

திருப்பூர் அரசு பள்ளிகளில் ஹை டெக் லேப் மூலமாக நடத்த பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ஹைடெக் லேப் எனப்படும் இணையதளத்தின் மூலம் நடத்தப்பட கூடிய வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்பட்ட வினாடி-வினா நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதில் ஆறாம் வகுப்பில் 35 மாணவ மாணவிகளும்,9 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்பு வரை தலா 40 மாணவ,மாணவிகளும் என 195 பேர் வெற்றி பெற்றனர்.இந்நிலையில் இணைய தளத்தின் மூலம் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )